அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 10 பேர் கைது


அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 10 பேர் கைது
x

சிவகாசி பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

பட்டாசு ஆலைகள்

சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் 100-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் விதிமீறல்கள் காரணமாக உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டு பூட்டி கிடக்கிறது. இந்த நிலையில் உரிய அனுமதியின்றி பல்வேறு இடங்களில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதை தடுக்க தனிக்குழு நியமித்துள்ளார். இந்த குழு பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறது. சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிராஜுதீன் தலைமையில் நடை பெற்ற சோதனையின் போது குருமூர்த்தி (வயது 35), விஜய்முத்துக்குமார் (30) ஆகியோர் அனுமதியின்றி தனியார் இடத்தில் பட்டாசு தயாரித்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து ரூ.27 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

10 பேர் கைது

இதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் சோதனை செய்த போது வலம்புரிபாண்டி (36), வீரமணி (30), உபைத்ரகுமான் (23) ஆகியோர் அனுமதியின்றி பட்டாசு தயாரித்ததாக கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.2லட்சத்து 17 ஆயிரத்து 500 மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் ஆலமரத்துப் பட்டி-செல்லையநாயக்கன்பட்டி ரோட்டில் உள்ள ஒரு பட்டாசு ஆலையின் பின்புறம் அனுமதியின்றி ஈஸ்வரன் (47), துரைப்பாண்டி (47), மாரிமுத்து (30), சுந்தர மூர்த்தி (27), முத்துக்குமார் (42) ஆகியோர் பட்டாசு தயாரித்ததை சப்- இன்ஸ்பெக்டர் ராமநாதன் கண்டுபிடித்து 5 பேரை யும் கைது செய்தார்.

இவர்களிடம் இருந்து ரூ.30ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தங்கராஜ் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Related Tags :
Next Story