கோழிக்கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த கோழிக்கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
நீலகிரி
ஊட்டியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் தாசில்தார் சரவணன், வருவாய் ஆய்வாளர் இளங்கோகிலகுரு தலைமையிலான அலுவலர்கள் நேற்று மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். இதில் மனிக்கூண்டு பகுதியில் 5 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த கோழிக்கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை தீவிரமாக நடக்கும் என்றும், யாரும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
Related Tags :
Next Story