சேப்பாக்கம் தொகுதியில் தீர்க்கப்படாத 10 கோரிக்கைகள் - கலெக்டரிடம் மனு அளித்த உதயநிதி ஸ்டாலின்
சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதியை சந்தித்து 10 கோரிக்கைகள் அடங்கிய மனுவை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வழங்கினார்.
சென்னை,
தமிழகத்தில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தங்கள் தொகுதியில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள 10 கோரிக்கைகளை மாவட்ட கலெக்டர்களிடம் மனுவாக அளிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் அறிவித்திருந்தார்.
இதன்படி சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதியை சந்தித்து 10 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
அந்த மனுவில் சென்னை மாநிலக் கல்லூரியில் புதிதாக கலையரங்கம் அமைக்கவும், சிந்தாதிரிப்பேட்டையில் தனியார் இடத்தில் செயல்பட்டு வரும் மீன் அங்காடியை மாநகராட்சி இடத்தில் அமைத்து நவீன மீன் அங்காடியாக மாற்றித் தரவும், தொகுதி முழுவதும் கழிவுநீர் கால்வாய் செல்ல ராட்சத குழாய்கள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story