100 நாள் வேலை அட்டை வழங்கும் நிகழ்ச்சி


100 நாள் வேலை அட்டை வழங்கும் நிகழ்ச்சி
x

ஆலத்தூர் ஊராட்சியில் 100 நாள் வேலை அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு 2022-23-ம் ஆண்டுக்கு 100 நாள் வேலைக்கான அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார்.

இதில் ஆலத்தூர், அருள்மொழிதேவன் பகுதியை சேர்ந்த 750-க்கும் மேற்பட்டவர்களுக்கு 100 நாள் வேலைக்கான அட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் தமிழ்மணி, ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story