11 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்
11 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சிவகாசி பகுதியில் வாகனசோதனை மேற்கொண்டனர். அய்யம்பட்டி -பாரப்பட்டி சந்திப்பில் அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வேனில் தலா 40 கிலோ கொண்ட 11 மூடைகளில் 440 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. வேனுடன் ரேஷன்அரிசி மூடைகளை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக அரிசி உரிமையாளர் ஆலங்குளத்தை சேர்ந்த ரமேஷ், வேன் டிரைவர் மற்றும் உரிமையாளர் சிவகாசி விஸ்வநத்தத்தை சேர்ந்த முனியசாமி (25) ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் முனியசாமியை கைது செய்தனர். அரிசி உரிமையாளர் ரமேசை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story