பொன்னேரி அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி சிக்கியது


பொன்னேரி அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி சிக்கியது
x

பொன்னேரி அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி சிக்கியது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, செங்குன்றம் பகுதிகளில் ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்தி சென்று கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக பல்வேறு புகார்கள் திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு துறைக்கு சென்றது. இதனையடுத்து குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் ரேஷன் அரிசி கடத்துபவர்களின் விவரங்களை சேகரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை செங்குன்றம் பகுதியில் இருந்து லாரி மூலம் ரேஷன் அரிசி ஆந்திராவுக்கு கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து குடிமைப்பொருள் குற்ற புலனாய்வுத் துறை போலீசார் வாகனங்களை சோதனை செய்தனர்.

அப்போது ஆந்திராவுக்கு ரேஷன் அரிசியை லாரியில் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் காரனோடை கிராமத்தின் வழியாக் சென்று கொண்டிருந்த அந்த லாரியை போலீசார் மடக்கி் பிடித்து ஆய்வு செய்தனர். அப்போது லாரியில் 50 கிலோ கொண்ட 240 மூட்டைகள் இருந்தது மேலும் லாரியில் இருந்து அரிசி மூட்டைகள் அனைத்தும் ரேஷன் அரிசியாகவும் 12 டன் எடை கொண்டதாக இருந்ததை கண்டுபிடித்தனர்.

பின்னர் லாரியுடன் 12 டன் ரேஷன் அரிசியும் அதில் இருந்த ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது செங்குன்றம் திருப்பதி நகரை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 43) என்பது தெரியவந்தது. போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.


Next Story