தூத்துக்குடியில் இருந்து தர்மபுரிக்கு சரக்கு ரெயில் மூலம் 1,290 டன் உரம் வந்தது


தூத்துக்குடியில் இருந்து தர்மபுரிக்கு சரக்கு ரெயில் மூலம் 1,290 டன் உரம் வந்தது
x
தினத்தந்தி 23 Nov 2022 7:30 PM GMT (Updated: 2022-11-24T01:00:29+05:30)

தூத்துக்குடியில் இருந்து தர்மபுரிக்கு 1,290 டன் உரம் ரெயில் மூலம் வந்தது.

தர்மபுரி

தூத்துக்குடியில் இருந்து தர்மபுரிக்கு 1,290 டன் உரம் ரெயில் மூலம் வந்தது.

உரம் வருகை

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நன்றாக மழை பெய்து உள்ளது. இதனால் விவசாய பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் விவசாயிகளுக்கு தேவையான உரத்தை வழங்குவதற்கு தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயில் மூலம் மொத்தம் 1,290 டன் உரம் தர்மபுரி ரெயில் நிலையத்துக்கு வந்தது.

இந்த உரத்தை தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள உரக்கடைகளுக்கு பிரித்து அனுப்பும் பணி வேளாண்மை இணை இயக்குனர் விஜயா மேற்பார்வையில் நடைபெற்றது. இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உரக்கடைகளுக்கு 713 டன் யூரியா, 63 டன் சூப்பர் பாஸ்பேட், 494 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் பிரித்து லாரிகள் மூலம் அனுப்பப்பட்டன.

விவசாயிகள் பயன்பெறலாம்

இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்ட உரக்கடைகளுக்கு 10 டன் யூரியா, 10 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் பிரித்து அனுப்பப்பட்டன. இந்தப் பணியை தர்மபுரி தர கட்டுப்பாட்டு வேளாண்மை அலுவலர் ருத்ரமூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விற்பனை அலுவலர் ரகுவரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி அரசு நிர்ணயித்துள்ள விலையில் யூரியா மற்றும் பிற உரங்களைப் பெற்று பயன் பெற வேண்டும் என்று வேளாண்மை இணை இயக்குனர் விஜயா தெரிவித்துள்ளார்.


Next Story