சாலை மறியலுக்கு முயன்ற 13 விவசாயிகள் கைது

சாலை மறியலுக்கு முயன்ற 13 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட வெற்றியூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த எள்ளை அறுவடை செய்து அதே கிராமத்தை சேர்ந்த திருஞானம் என்பவரிடம் விற்பனை செய்துள்ளனர். ஆனால் அதற்கான தொகையை திருஞானம் விவசாயிகளிடம் தராமல் நாள் கடத்தி வந்துள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த விவசாயிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தனர். ஆனால் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தி அடைந்த விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட முடிவெடுத்து அரியலூரில் இருந்து தஞ்சை செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட முயன்ற 13 விவசாயிகளை கைது செய்தனர். பின்னர் அவர்கள் மாலை விடுதலை செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story