போலி ஆவணங்கள் மூலம் ரூ.13 லட்சம் மோசடி; சங்க பெண் செயலாளர் உள்பட 5 பேருக்கு சிறை தண்டனை


போலி ஆவணங்கள் மூலம் ரூ.13 லட்சம் மோசடி; சங்க பெண் செயலாளர் உள்பட 5 பேருக்கு சிறை தண்டனை
x

திருவாலங்காட்டில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.13 லட்சம் மோசடி செய்த வழக்கில் சங்க பெண் செயலாளர் உள்பட 4 பேருக்கு சிறை தண்டனை வழங்கி திருத்தணி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

திருவள்ளூர்

ரூ.13 லட்சம் மோசடி

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கடன் வழங்க ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சேர்ந்து சிக்கன கடன் சங்கம் ஒன்றை ஆரம்பித்தனர். இந்த சங்கத்தில் 16 ஆசிரியர்களுக்கு கடன் கொடுத்தது போல போலியான ஆவணங்களை தயாரித்து ரூ.13 லட்சத்து 71 ஆயிரம் கையாடல் செய்யப்பட்டது.

இதுகுறித்து புகாரின் பேரில் திருவள்ளூர் மாவட்ட பொருளாதார குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் கடந்த 2004-ம் ஆண்டு சங்கத்தின் செயலாளர் வசந்தி ஜூலியட், அலுவலர்கள் சத்தியமூர்த்தி, குருராமச்சந்திரன், சரக மேற்பார்வையாளர் குணா, கண்காணிப்பாளர்கள் ரகுராமன், சிவராமன், வேலாயுதம் ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவுப்பதிவு செய்தனர்.

சங்க செயலாளருக்கு 4 ஆண்டு சிறை

இந்த வழக்கு கடந்த 19 ஆண்டுகளாக திருத்தணி குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய சிவராமன் (வயது 75) வேலாயுதம் (71) ஆகிய இருவரும் இறந்துவிட்டனர். இந்த நிலையில் வழக்கின் வாதங்கள் முடிவுற்ற நிலையில் குற்றவியல் நீதித்துறை நடுவர் முத்துராஜ் சங்கத்தின் பணத்தை கையாடல் செய்த குற்றத்திற்காக சங்கத்தின் செயலாளர் வசந்தி ஜூலியட்டுக்கு 4 சிறை தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும், மற்ற 4 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


Next Story