கும்பகோணத்தில் 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி
கும்பகோணத்தில் 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை,
தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் 30 பேர் வரையில் டெங்குவால் பாதிக்கப்படுகின்றனர். இதனால், அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், கும்பகோணத்தில் 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 13 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு அறிகுறிகளுடன் மேலும் 51 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு பாதிப்பு தொடர்ந்து உயர்வதால் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story