தமிழகத்தில் 13 ஆயிரம் கிலோ கஞ்சா - அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ஏடிஜிபி
நடப்பாண்டில் இதுவரை தமிழகத்தில் 13 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஏடிஜிபி அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டார்.
சென்னை,
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி சென்னை அண்ணா ஆர்ச் சந்திப்பில் 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போதைப்பொருட்ளுக்கு எதிராக பதாகைகள் ஏந்தியும் வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போதைப் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நடப்பாண்டில் இதுவரை தமிழகத்தில் 13 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டார்.
Related Tags :
Next Story