இரட்டை மடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்த 14 விசைப்படகு உரிமையாளர்களுக்கு அபராதம்


இரட்டை மடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்த 14 விசைப்படகு உரிமையாளர்களுக்கு அபராதம்
x

இரட்டை மடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்த 14 விசைப்படகு உரிமையாளர்களுக்கு அபராதம்

திருவாரூர்

முத்துப்பேட்டை கடல் பகுதியில் தடையை மீறி இரட்டை மடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்த 14 விசைப்படகு உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

மீனவ கிராமங்கள்

திருவாரூர் மாவட்டத்தை பொருத்தவரை கடற்கரையோர மீனவ கிராமங்கள் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் மட்டுமே உள்ளது. இந்த பகுதியில் கரையங்காடு, கற்பகநாதர்குளம், கீழவாடியக்காடு, முனங்காடு, தொண்டியக்காடு, செங்காங்காடு, ஜாம்புவானோடை, வீரன்வயல், உப்பூர், ஆலங்காடு, துரைக்காடு, ஆசாத்நகர், பேட்டை ஆகிய கிராமங்கள் கடற்கரையோர மீனவ கிராமங்கள் ஆகும்.

இந்த கிராமத்தை சேர்ந்த மீனவ சமுதாய மக்கள் இந்த பகுதி கடலை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். முத்துப்பேட்டை கடலோர பகுதியானது, அலையாத்திக்காடுகளின் நிரந்தர ஒரு பகுதியாகும்.

லகூன் என்னும் கயல் பகுதி

நாட்டில் எங்கும் காணாத லகூன் என்னும் கயல் பகுதியும் கொண்டதாகும். இதனால் தினந்தோறும் இந்த பகுதி மீனவர்கள் சிறிய அளவிலான பைபர் படகில் சாதாரண வலைகளை கொண்டு ஆழ்கடல் செல்லாமல் கயல் பகுதி மட்டுமின்றி அலையாத்திகாடுகளை ஓட்டியுள்ள கடலில் மீன் பிடித்து கொண்டு வந்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் அருகே உள்ள மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதியில் உள்ள ஆழ்கடலில் இரட்டை மடி வலையை பயன்படுத்தி பெரிய அளவிலான விசைப்படகுகளை கொண்டு மீன் பிடிக்கும் மீனவர்கள் இங்கு வந்து பிடித்து இங்குள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பு அடைய செய்து வருகின்றனர்.

ரோந்து பணி

இதனால் இங்கு மீன் பிடிப்பதையும், அந்த இரட்டை மடி வலையை பயன்படுத்தி பிடிக்கும் விசைப்படகுகள் இங்கு வரவும், மீன் பிடிக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி சில தினங்களாக மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் மீனவர்கள் இந்த பகுதியில் இரட்டை மடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்து வருவதாக பேட்டை பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீன்வளத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மீன்வளத்துறை ஆய்வாளர் தர்மதுரை தலைமையில் கடலோர காவல் போலீஸ்காரர்கள் சுரேஷ், சாகர் மித்ரா, அலுவலர் ஆலன் வில்பர்ட் ஆகியோர் அடங்கிய குழுவினர் மீனவர்களின் படகுகள் மூலம் சம்பந்தப்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அபராதம்

இதில் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் பகுதியை சேர்ந்த 14 பெரிய விசைப்படகு மீனவர்கள் தடையை மீறி முத்துப்பேட்டை கடல் பகுதியில் இரட்டை மடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்தது கண்டறியப்பட்டது. மேலும் படகுகளில் பதிவு செய்யப்பட்ட நம்பர்கள் அடிப்படையில் அனைத்து பகுதிகளின் உரிமையாளர்களின் பெயர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் அபராதம் செலுத்த உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த படகுகளுக்கு டீசல் மானியம் ரத்து செய்யப்படும். பல சலுகைகள் கிடைக்காது என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story