வைகையில் 14 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


வைகையில் 14 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x

வைகையில் 14 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூடலூர்,

தேனி மாவட்டத்தில் கனமழை நீடித்து வருவதால் பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன. மூலவைகையாறு, முல்லைபெரியாறு, வராகநதி உள்பட அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. வைகை அணையின் மொத்த கொள்ளளவு 71 அடியாகும்.

வழக்கமாக 69 அடிவரை தண்ணீர் தேக்கப்படும். இந்த ஆண்டு 70 அடியில் நிலைநிறுத்தி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் 69 அடியாக நீர்மட்டம் குறைந்தது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் 70.01 அடியாக மீண்டும் உயர்ந்தது.

இதனால் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி 5,150 கனஅடிநீர் வருகிறது. அந்த நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வைகை அணையில் இருந்து 14 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மதுரை ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.


Next Story