சிவகங்கை மாவட்டத்திற்கு 144 தடை உத்தரவு

சிவகங்கை மாவட்டத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் வரும் 27-ம் தேதியன்று தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்களான மருது சகோதரர்களின் குருபூஜையும் , 30-ம் தேதியன்று முத்துராமலிங்க தேவரின் குருபூஜையும் நடைபெற உள்ளது.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை வரும் 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் ஆயிசா அஜித் அறிவித்துள்ளார். இதற்காக சுமார் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





