வேலூர் மாவட்டத்தில் 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை
குடியாத்தம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கங்கை அம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி 1ம் தேதி சிரசு திருவிழா நடைபெறும்
வேலூர்,
வேலூர் மாவட்டத்திற்கு வரும் 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி உத்தரவிட்டுள்ளார்.வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ கங்கை அம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி ஒன்றாம் தேதி சிரசு திருவிழா நடைபெறும். சிரசு ஊர்வலம் வரும் (செவ்வாய்க்கிழமை) 14-ம் தேதி நடைபெறும் .
இதில் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொள்ள வசதியாக 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை நாளாக அறிவித்து மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி உத்தரவிட்டுள்ளார்.அதற்கு பதிலாக ஜூன் 22-ம் தேதி அரசு அலுவலர்களுக்கு வேலை நாளாகவும், ஜூன் 23-தேதி ஞாயிற்றுக்கிழமை அமைச்சக பணியாளர்களுக்கு வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story