உடலில் மறைத்து ரூ.15½ லட்சம் தங்கம் கடத்தல்
உடலில் மறைத்து ரூ.15½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
செம்பட்டு:
தங்கம் கடத்தல்
திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் வரும் சில பயணிகள் தங்கத்தை கடத்தி வரும் நிலை உள்ளது. சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
பறிமுதல்
அப்போது பயணி ஒருவர் தனது உடலில் மறைத்து தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரூ.15 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பிலான 260 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.