அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் பணிக்கு சென்னை கோட்டத்தில் 15 ரெயில் நிலையங்கள் தேர்வு


அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் பணிக்கு சென்னை கோட்டத்தில் 15 ரெயில் நிலையங்கள் தேர்வு
x

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் பணிக்கு சென்னை கோட்டத்தில் 15 ரெயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

சென்னை

அதிக வருவாய், வரவேற்பு மற்றும் நகரங்களின் பாரம்பரிய சிறப்பின் அடிப்படையில் நாடு முழுவதும் 1,275 ரெயில் நிலையங்களில் புதிய நவீன வசதிகளை நீண்ட கால சிறப்பு திட்டத்தின் அடிப்படையில் மேம்படுத்துவதற்காக 'அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. ரெயில் நிலையங்களில் குறைந்தபட்ச அடிப்படை தேவைகளை ஏற்படுத்துதல், எஸ்கலேட்டர் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி, ரெயில் நிலையத்தின் வடிவமைப்பு, 5-ஜி சேவை, நடைமேடைகளை மேம்படுத்துதல் மற்றும் ஏற்கனவே உள்ள வசதிகளை மேம்படுத்துதல் என்று நீண்டகால தேவையின் அடிப்படையில் புதிய நவீன வசதிகளுடன் இந்த ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும். அந்தவகையில் சென்னை கோட்டத்தில் உள்ள 15 ரெயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி, அம்பத்தூர், அரக்கோணம், செங்கல்பட்டு, சென்னை கடற்கரை, கூடுவாஞ்சேரி, கிண்டி, கும்மிடிப்பூண்டி, ஜோலார்பேட்டை, மாம்பலம், சென்னை பூங்கா, பெரம்பூர், பரங்கிமலை, சூலூர்பேட்டை, திருத்தணி, திருவள்ளூர் ஆகிய 15 ரெயில் நிலையங்கள் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இந்த ரெயில் நிலையங்களில் திட்டம்-1, திட்டம்-2 என்று 2-ஆக பிரித்து பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. தேவைக்கு ஏற்ப ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரையில் ஒவ்வொரு ரெயில் நிலையத்துக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட இருக்கிறது. மேலும், முதல்கட்ட பணிகளை அடுத்த மாதம் தொடங்கி 2023-2024 நிதி ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.


Next Story