டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற 15 ஆசிரியர்கள் தேர்வு


டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற 15 ஆசிரியர்கள் தேர்வு
x

திருச்சி மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற 15 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி

15 ஆசிரியர்கள்

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ந் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள், ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் சிறந்த ஆசிரியர்களுக்கு மாநில அரசு விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. அவ்வாறு விருது பெறுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசும், ரூ.2 ஆயிரத்து 500 மதிப்பிலான வெள்ளிப்பதக்கமும், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பயணப் படியும் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் திருச்சி மாவட்டத்தில் 15 ஆசிரியர்கள், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ரமேஷ்குமார், துவாக்குடி மலை (வடக்கு) தலைமை ஆசிரியர் கருணாம்பாள், எசனைக்கோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி திருமாவளவன், நம்புக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செல்வகுமார், சுண்டக்காப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பவள்ளி, ஆரியக் கோன்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ராஜசேகர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விருது

மேலும் திருச்சி புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ராஜமாணிக்கம், ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மீனலோச்சனி, திருச்சி ரத்தினா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கிருத்திகா, திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பூங்கொடி, திருச்சி ராசா உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ரவிச்சந்திரன், சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணி லூயிஸ் மத்தியாஸ், கண்டோன்மெண்ட் வாசவி வித்யாலயா மெட்ரிக் பள்ளி முதல்வர் பாவை, திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜேம்ஸ்பால்ராஜ், அரசங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் அருணா பாலன் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு சென்னையில் நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்படுகிறது.


Next Story