கஞ்சா, லாட்டரி விற்ற 16 பேர் கைது


கஞ்சா, லாட்டரி விற்ற 16 பேர் கைது
x
தினத்தந்தி 12 Dec 2022 6:45 PM GMT (Updated: 12 Dec 2022 6:45 PM GMT)

மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை: கஞ்சா, லாட்டரி விற்ற 16 பேர் கைது போலீசார் நடவடிக்கை

கடலூர்

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, லாட்டரி மற்றும் குட்கா விற்பனை செய்வோரை கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்கள் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனை செய்த கடலூர் புதுநகர், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்ற அருண்குமார், சூர்யா, சதீஷ்குமார் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக சோமு, கனகராஜ், சுந்தரேசன், செல்வம், கிருபாகரன், ஆகாஷ், முகமது இஸ்மாயில் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். குட்கா விற்பனை செய்ததாக நெல்லிக்குப்பம் கமல்புதின் (வயது 63), மங்கலம்பேட்டை அக்பர்அலி (51), ஜெயசங்கர் மனைவி சிவகாமி (34) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 2 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.


Next Story