சேலத்தில் 1,600 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் - 3 பேர் கைது


சேலத்தில் 1,600 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் - 3 பேர் கைது
x

சேலத்தில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 1,000 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது.

அதனை பறிமுதல் செய்த போலீசார், ஆட்டோவில் வந்த நபரை கைது செய்தனர். இதே போல் மற்றொரு ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story