ராமநாதபுரத்தில் வருகிற 17-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


ராமநாதபுரத்தில் வருகிற 17-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
x

ராமநாதபுரத்தில் வருகிற 17-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 17-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வர உள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழலை கருத்தில் கொண்டு மாணவ, மாணவிகள் நலன்கருதி விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகிற 22-ம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story