காக்களூரில் 18-ந்தேதி மின்தடை
காக்களூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக 18-ந்தேதி மின்சார வினியோகம் தடை செய்யப்பட்டிருக்கும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் கோட்டத்தை சார்ந்த காக்களூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள்மேற்கொள்ளப்பட உள்ளது. ஆகவே வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காக்களூர், காக்களூர் சிட்கோ, நரசிங்கபுரம், ஆஞ்சநேயபுரம், புல்லரம்பாக்கம், மெய்யூர், குஞ்சலம், பென்னலூர்பேட்டை, ஈக்காடு, செவ்வாப்பேட்டை, காக்களூர் ஹவுசிங் போர்டு, பூண்டி, ஒதப்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் தடை செய்யப்பட்டிருக்கும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story