சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு
x

சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

சென்னை,

சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

விஜயன், பிரியா தம்பதியின் ஒன்றரை வயது மகன் சாத்விக். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சாத்விக், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால், திங்கள்கிழமை இரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் சமீபத்தில் சாத்விக் டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சாத்விக், வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

இதையடுத்து காஞ்சிபுரம் நகராட்சியின் துப்புரவுத் துறையினர், 49வது வார்டு முழுவதையும் சுத்தம் செய்தனர். மேலும் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களை பரிசோதிக்க சிறப்பு காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்பட்டன.

Next Story