தீபாவளி பண்டிகை: சென்னையில் பாதுகாப்புப்பணியில் 18 ஆயிரம் போலீசார்...!


தீபாவளி பண்டிகை: சென்னையில் பாதுகாப்புப்பணியில் 18 ஆயிரம் போலீசார்...!
x
தினத்தந்தி 11 Nov 2023 9:40 AM IST (Updated: 11 Nov 2023 11:55 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது.

சென்னை,

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாட்டிலும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வருகின்றனர். இதையொட்டி மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் பாதுகாப்புப்பணியில் 18 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் மக்கள் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும், சிசிடிவி கேமராக்கள் மூலமாகவும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.


Next Story