இலங்கைக்கு கடத்த முயன்ற 180 கிலோ பீடி இலை- 150 லிட்டர் டீசல் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற 180 கிலோ பீடி  இலை- 150 லிட்டர் டீசல் பறிமுதல்
x

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 180 கிலோ பீடி இலை, 150 லிட்டர் டீசல் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 180 கிலோ பீடி இலை, 150 லிட்டர் டீசல் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வாகன சோதனை

தூத்துக்குடியில் இருந்து மஞ்சள், புகையிலை உள்ளிட்ட பொருட்கள் சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்தப்படுவதை தடுக்க கடலோர பாதுகாப்பு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இ்ந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி விளாத்திகுளம் துணை சூப்பிரண்டு பிரகாஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் தருவைக்குளம் அருகே உள்ள பட்டினமருதூர் கடற்கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு சரக்கு வேனை சோதனை செய்தனர்.

அதில் சுமார் 180 கிலோ பீடி இலையும், சுமார் 150 லிட்டர் டீசலும் இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அவற்றை சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

பீடி இலை- டீசல் பறிமுதல்

உடனே போலீசார் 180 கிலோ பீடி இலை, 150 லிட்டர் டீசல் மற்றும் சரக்கு வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story