182 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 3 கடைகளுக்கு சீல்


182 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 3 கடைகளுக்கு சீல்
x

திருச்சியில் 182 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக 3 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன.

திருச்சி

கடையில் ஆய்வு

திருச்சி மார்க்கெட் பகுதியில் உள்ள முருகன் டீ கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அந்த கடையில் ஆய்வு நடத்தினர். அப்போது அந்த கடையில் 10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், அந்த கடைக்கு விற்பனை செய்த மொத்த விற்பனையாளர் திருவானைக்கோவிலை சேர்ந்த குமார் என்பவரின் கணபதி ஸ்டோரில் 2.8 கிலோ கிராமும், ராஜகோபுரம் அருகே உள்ள லட்சுமி பீடா ஸ்டாலில் 7 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்யப்பட்டது.

182 கிலோ புகையிலை பொருட்கள்

இதேபோல் தில்லைநகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ராமசந்திரன் என்பவரிடம் இருந்து 163 கிலோ புகையிலை பொருட்கள் என மொத்தம் 182¾ கிலோ புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன்பின்னர் 3 கடைகளுக்கும் 'சீல்' வைக்கப்பட்டது.

இதையடுத்து திருவானைக்கோவில், காந்தி மார்க்கெட், தில்லைநகர் போலீஸ் நிலையங்களில் மேல் நடவடிக்கைக்காக 5 நபர்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய ஒரு கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story