வாலிபரை தாக்கி நகை பறித்த 2 பேர் கைது


வாலிபரை தாக்கி நகை பறித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 27 Oct 2023 6:45 PM GMT (Updated: 27 Oct 2023 6:46 PM GMT)

நெய்வேலியில் வாலிபரை தாக்கி நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்

நெய்வேலி,

நெய்வேலி அருகே வடக்குத்து ஊராட்சியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 35). இவர் நெய்வேலி இந்திரா நகர் எம்.ஆர்.கே. சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது 2 பேர் அவரை வழிமறித்து தாக்கி அவரிடம் இருந்து 3 பவுன் நகையை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் நெயவேலி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் நகையை பறித்து சென்றது, நெய்வேலி பகுதியை சேர்ந்த 18 மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் என்பது தெரிந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story
  • chat