ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலை மேலாளரை வெட்டிய 2 பேர் கைது


ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலை மேலாளரை வெட்டிய 2 பேர் கைது
x

ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலை மேலாளரை வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம்

கத்தியால் வெட்டு

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணுர் பகுதியில் தனியார் கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் பகுதியை சேர்ந்த கோகுல்ராஜ் (வயது 35) மனித வள மேலாளராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் கோகுல்ராஜ் தொழிற்சாலை உள்ளே வரும் போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரை கத்தியால் சரமாரியாக வெட்டினர். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றனர். அக்கம் பக்கத்தினர் கோகுல்ராஜை மீட்டு அருகே இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

கைது

இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.போலீஸ் விசாரணையில் அவரை வெட்டியது மண்ணுர் பகுதியை சேர்ந்த மனோஜ் (24), தண்டலம் பகுதியை சேர்ந்த அசோக் (19) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் கோகுல்ராஜ் அங்கு வேலை செய்யும் பெண்களிடம் தவறாக நடக்க முயன்றதும் தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story