கஞ்சா விற்ற 2 போ் கைது

கஞ்சா விற்ற 2 போ் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்
செஞ்சி,
செஞ்சி அடுத்த அப்பம்பட்டு கவரை அருகே தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து சோதனை செய்த போது அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. விசாரணையில், கடகம்பூண்டி கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் மணிகண்டன் (வயது 27), கவரை கிராமத்தை சேர்ந்த வரகுணபாண்டியன் மகன் தருண்குமார் (20) என்பதும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தொிந்தது. இதையடுத்து அவர்கள் 2 போ் மீதும் அனந்தபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்து செய்து விசாணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story






