கஞ்சா விற்ற 2 பேர் கைது


கஞ்சா விற்ற 2 பேர் கைது
x

மாமல்லபுரம் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி, மணமை கிராமங்களில் உள்ள புதர் மறைவிடத்தில் சிலர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பதாக தகவல் வந்தது. மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் பூஞ்சேரி, மணமை போன்ற இடங்களில் உள்ள புதர், செடி, கொடிகள் மறைவிடத்தில் சோதனை செய்தனர். அப்போது 2 இடங்களிலும் புதர் மறைவிடத்தில் பிளாஸ்டிக் கவரில் பொட்டலம் மடித்து கஞ்சா விற்று கொண்டிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

இதில் பூஞ்சேரியில் புதர் மறைவிடத்தில் கஞ்சா விற்ற செங்கல்பட்டு திம்மராஜகுளம் பகுதியை சேர்ந்த அருள் (வயது 48) என்பவரையும், மணமையில் அந்த பகுதியை சேர்ந்த குருமூர்த்தி (37) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவரிடம் இருந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மொத்தம் 2½ கிலோ கஞ்சா பொட்டலங்கள் பிறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் தப்பி ஓட முயன்ற இருவரது மோட்டார் சைக்கிளையும் போலீசார் கைப்பற்றினர். திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story