பேரம்பாக்கம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது


பேரம்பாக்கம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
x

பேரம்பாக்கம் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

கஞ்சா சிக்கியது

கடம்பத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பா.சீபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில், பேரம்பாக்கம் அருகே உள்ள நரசிங்கபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் 2 வாலிபர்கள் தாங்கள் வைத்திருந்த பையுடன் ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த இரண்டு பேரையும் விரட்டி பிடித்து விசாரித்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தெரிவித்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை திறந்து பார்த்த போது அதில் ஒன்றரை கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது.

2 பேர் கைது

போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர்கள் நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் (வயது 21), இருளஞ்சேரியை சேர்ந்த முகேஷ் (19) என தெரிய வந்தது.

அவர்கள் ஆந்திராவில் கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்து இருளஞ்சேரி, நரசிங்கபுரம், பேரம்பாக்கம், போன்ற பகுதியில் விற்பனைக்கு வைத்திருந்ததாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story