புகையிலை பொருட்கள் விற்ற 2 போ் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 2 போ் கைது செய்யப்பட்டனர்.Arrest
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் நகரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், மதன்மோகன் தலைமையிலான போலீசார் கீழையூர் மெயின் ரோட்டில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சாரதா (வயது 73) என்பவரின் பெட்டிக்கடையில் சோதனை செய்த போது விற்பனைக்காக புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரிந்தது. இதை போல் ஆவியூர் கிராமத்தில் செல்வம் (53) என்பவரின் பெட்டி கடையிலும் ரூ.300 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக சாரதா, செல்வம் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story