கிராவல் மண் திருடிய 2 பேர் கைது


கிராவல் மண் திருடிய 2 பேர் கைது
x

கிராவல் மண் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள வாலிகண்டபுரம் கிராமத்தில் கிராவல் மண் திருடுவதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் மங்களமேடு சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வாலிகண்டபுரத்திலிருந்து பிரம்மதேசம் செல்லும் வழியில் அரசு அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிச்சென்று கொண்டிருந்த பிரம்மதேசம் கடைத்தெருவை சேர்ந்த இளவரசன் (வயது 41), எளம்பலூர் காட்டுக்கொட்டாய் உப்பு ஓடையை சேர்ந்த தண்டபாணி (45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் டிப்பர் லாரி, பொக்லைன் எந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story