ரகசியமாய் போதை பொருள் தயாரித்த 2 சிறுவர்கள்: மிரண்டு போன போலீசார் - 1000 கிலோ மாவா பறிமுதல்

ரகசியமாய் போதை பொருள் தயாரித்த 2 சிறுவர்கள்: மிரண்டு போன போலீசார் - 1000 கிலோ மாவா பறிமுதல்
x

சென்னையில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருளான மாவா பொருளை உற்பத்தி செய்து வந்த 2 சிறுவர்கள் உட்பட நால்வரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னையில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருளான மாவா பொருளை உற்பத்தி செய்து வந்த 2 சிறுவர்கள் உட்பட நால்வரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை தண்டையார்பேட்டையில் தொடர்ந்து மாவா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில், குடோன் ஒன்றில் இருந்து 1000 கிலோ மாவா மற்றும் அதை உற்பத்தி செய்யும் மூலப்பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, இதில் தொடர்புடைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த புனிதா மற்றும் கொடூங்கையூரை சேர்ந்த பாலசுப்பிரமணியம் ஆகியோரை கைது செய்த போலீசார், 2 சிறுவர்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story