2 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு


2 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
x
தினத்தந்தி 12 Oct 2023 2:05 AM IST (Updated: 12 Oct 2023 2:10 AM IST)
t-max-icont-min-icon

கொட்டாம்பட்டி அருகே 2 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது.

மதுரை

கொட்டாம்பட்டி,

கடையை உடைத்து பணம் திருட்டு

கொட்டாம்பட்டி அருகே உள்ள கருங்காலக்குடியை சேர்ந்தவர் சையதுமீரா. இவருடைய மகன் சுபருல்லாகான் (வயது 41) என்பவர் அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள வணிக வளாகத்தில் பால் மற்றும் மளிகை கடை நடத்தி வருகிறார்.

வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் நள்ளிரவு கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் இரும்பு பெட்டகத்தை உடைத்து உள்ளே இருந்த ரூ.47 ஆயிரத்தை திருடியுள்ளனர். மேலும் தங்களது முகம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானதால் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு பெட்டகத்தில் இருந்த டி.வி.ஆர் கருவியை உடைத்து விட்டு தூக்கிச் சென்றனர்.

ஜவுளிக்கடையில் திருட்டு

இதே போல் அருகில் உள்ள கண்ணதாசன் என்பவரின் ஜவுளி கடையில் இரும்பு ராடு உதவியுடன் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளை கும்பல் அங்கிருந்த டேப்லெட் மற்றும் ரூ.23 ஆயிரம் மதிப்புள்ள துணிமணிகளையும் திருடி சென்றனர். இதை தொடர்ந்து அருகில் இருந்த 2 கடைகளிலும் பூட்டை உடைக்க முடியாததால் அவை ெகாள்ளையில் இருந்து தப்பின.

இது குறித்து கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்திபாலாஜி மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Related Tags :
Next Story