கேளம்பாக்கம் அருகே ரூ.2 கோடி அரசு நிலம் மீட்பு


கேளம்பாக்கம் அருகே ரூ.2 கோடி அரசு நிலம் மீட்பு
x

கேளம்பாக்கம் அருகே ரூ.2 கோடி அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு

ஆக்கிரமிப்புகள்

வடகிழக்கு பருவமழை காலங்களில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தாழம்பூர். படூர், நாவலூர், சிறுசேரி, கேளம்பாக்கம் பகுதிகளில் சில இடங்களில் வெள்ளம் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டது. நீர் வெளியேறுவதற்காக இருந்த கால்வாய்களில் ஆக்கிரமிப்புகள் உருவான தால் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

கடந்த. 2021-ம் ஆண்டு அதிகாரிகள் இந்த கிராமங்களில் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் கால்வாய், சிறு பாலங்கள் போன்றவற்றில் உருவாகியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே நீர் தேங்குவதை தடுக்க முடியும் என்றும், தேவைப்படும் இடங்களில் புதிய கால்வாய்கள் அமைக்க வேண்டும் என்றும் இந்த குழுக்கள் அறிக்கை கொடுத்தது.

வீடு அகற்றம்

இந்த, அறிக்கையின் அடிப்படையில் நீர் நிலைகள், கால்வாய்கள், சிறுபாலங்கள் போன்றவற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக படூர் ஊராட்சியில் கிழக்கு கடற்கரை சாலையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சுமார் 4 சென்ட் பரப்பளவில் உள்ள நிலத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு வீடு கட்டப்பட்டிருந்தது. இந்த ஆக்கிரமிப்பு கால்வாய் மற்றும் சிறு பாலத்தை ஒட்டி இருந்ததால் தண்ணீர் வெளியேற முடியாத நிலை இருந்தது. இதையடுத்து, இந்த வீட்டை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும் அந்த நபர் வீட்டை காலி செய்யாததால் நேற்று முன்தினம் ஆக்கிரமிப்பை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

இதில் நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் சந்திரமோகன், திருப்போரூர் தாசில்தார் பூங்கொடி ஆகியோர் முன்னிலையில், நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு வீட்டை அகற்றினர். இதற்கு வீட்டின் உரிமையாளர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ஆக்கிரமிப்பை அகற்றினர்.

ரூ.72 கோடி

அக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.72 கோடி என்று வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.


Next Story