2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதிகளில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி
தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு வைகை அணை சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் வைகை அணை சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து நகர் பகுதிக்கு குடிநீர் கொண்டு வரும் மெயின் குழாயில் அரப்படித்தேவன் பட்டி அருகே உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் வீணாகி வருகிறது. இதன் காரணமாக குழாயில் சீரமைப்பு பணி நடைபெற உள்ளது. இதையொட்டி நகராட்சி பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை), நாளை ஆகிய 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story