மீன்பிடித்த 2 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி பலி


மீன்பிடித்த 2 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி பலி
x

திருப்பத்தூர் அருகே ஏரியில் மீன்பிடித்தபோது 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்தனர். தந்தையின் கண்முன் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே ஏரியில் மீன்பிடித்தபோது 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்தனர். தந்தையின் கண்முன் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

மீன்பிடிக்க சென்றனர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பெத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மகன் பிரபாகரன் (வயது 9). தந்தையும், மகனும் நேற்றுமுன் தினம் ஆண்டியப்பனூர் பகுதியில் உள்ள பிரபாகரனின் பாட்டி வீட்டிற்கு வந்துள்ளனர். இந்தநிலையில் ஆண்டியப்பனூரை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன்கள் உதயகுமார் (11), சரவணன் (9), பார்த்திபன், அவரது மகன் பிரபாகரன் ஆகிய 4 பேரும் இருனாபட்டு ஊராட்சிக்கு உட்பட்ட எகிலி ஏரிக்கு சென்றுள்ளனர்.

அங்கு மீன்பிடிப்பதற்காக உதயகுமார் மற்றும் பிரபாகரன் ஆகிய இருவரும் ஏரிக்குள் இறங்கி உள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் சேற்றில் சிக்கிக்கொண்டு தவித்தனர். சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்க தொடங்கினர். இதைப்பார்த்த பார்த்திபன் மற்றும் உறவினர்கள் கூச்சலிட்டனர்.

நீரில் மூழ்கி பலி

அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து காப்பற்ற முயன்றும் சேற்றில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து குரிசிலாப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் ஏரியில் மூழ்கிய பிரபாகரன் மற்றும் உதயகுமார் ஆகியோரை மீட்டு ஆண்டியப்பனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது சிறுவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதைதொடர்ந்து இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை கண்முன்னே மகன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story