மின்னல் தாக்கி 2 ஆடுகள் சாவு


மின்னல் தாக்கி 2 ஆடுகள் சாவு
x

கணபதி அக்ரஹாரத்தில் மின்னல் தாக்கி மின்னல் தாக்கி 2 ஆடுகள் செத்தன.

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை:

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே கணபதி அக்ரஹாரம் பாலக்கரையில் வசித்து வருபவர் மாரி (வயது 58). இவர் கணபதி அக்ரகாரம் ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள ஒரு கொட்டகையில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மாரி வீட்டின் பின்புறம் கட்டியிருந்த ஆடுகளின் மீது மின்னல் தாக்கியது. இதில் 2 ஆடுகள் செத்தன. மேலும் மாரி வீட்டிலிருந்த டி.வி. உள்ளிட்ட மின்சாதன பொருட்களும் சேதம் அடைந்தது. இது குறித்து தகவலறிந்த கணபதி அக்ரஹாரம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் யோகராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட மாரி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

1 More update

Next Story