மளிகைக்கடையில் 2 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; உரிமையாளர் கைது
மளிகைக்கடையில் 2 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை
விராலிமலை தாலுகா, மலம்பட்டி பகுதியில் உள்ள மளிகை கடை மற்றும் பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று மாத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் செவ்வந்தி தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அதே ஊரை சேர்ந்த மருதன் (வயது 48) என்பவரது மளிகை கடையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ஹான்ஸ் உள்ளிட்ட 2 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருதனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story