சிதம்பரம்: மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் பலி
சிதம்பரத்தில் கார், மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
சிதம்பரம்:
சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி வடகிருஷ்ணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராமன் மகன் அசோக்குமார் (வயது 31), இவரும் இவருடன் குகன் (18), ஆகிய இருவரும் நேற்று இரவு, தனது காரில் சிதம்பரத்தில் இருந்து புவனகிரி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது வடகறி ராஜபுரம் குளத்து மேட்டு தெருவை சேர்ந்த புருஷோத்தமன் (43), இவருடைய தங்கை புனிதா (38), ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சிலுவை புறம் பஸ் நிறுத்தம் அருகே மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அசோக் குமார் காரை வேகமாக ஓட்டி புருஷோத்தமன் ஒட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீதும் வேகமாக மோதி, அருகில் இருந்த புளிய மரத்தில் மோதி உள்ளார். இந்த சம்பவத்தில் தூக்கி எறியப்பட்ட புருஷோத்தமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார் ஓட்டுநர் அசோக் குமாரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த புனிதா, அசோக் குமார் ஆகியோர் பலத்த காயம் ஏற்பட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் போலீசார் நேரில் சென்று சம்பவ இடத்திலேயே இறந்த புருஷோத்தமன், அசோக்குமார் ஆகிய இருவரையும் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை அடுத்து வருகின்றன.