தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய 2½ லட்சம் கனஅடி தண்ணீர்


தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய 2½ லட்சம் கனஅடி தண்ணீர்
x

நெல்லை மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் தாமிரபரணி ஆற்றில் 2½ லட்சம் கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் தாமிரபரணி ஆற்றில் 2½ லட்சம் கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளம் சந்திப்பு பகுதியை தீவாக்கியது. சந்திப்பு, சிந்துபூந்துறை பகுதியில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் ஏராளமான மக்கள் வீடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கடற்கரை கிராமங்களில் இருந்து படகுகளை லாரிகளில் எடுத்து வந்தனர். மேலும் மீனவர்களும் வரவழைக்கப்பட்டனர். அந்த படகுகள் நெல்லை சந்திப்பு பகுதியில் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. அவர்கள் கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு வந்து அண்ணா சிலை அருகே மேட்டு பகுதியில் கொண்டு வந்து விட்டனர்.

நெல்லை மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. இந்த மலைக்கு 3 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story