இளம் திறமையாளர்களால் இந்தியாவுக்கு மேலும் 2 தங்க பதக்கங்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


இளம் திறமையாளர்களால் இந்தியாவுக்கு மேலும் 2 தங்க பதக்கங்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x

காமன்வெல்த் போட்டியில் இளம் திறமையாளர்கள் இந்தியாவுக்காக மேலும் 2 தங்க பதக்கங்களை வென்றுள்ளனர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இளம் திறமையாளர்களான ஜெர்மி லால்ரின்னுங்கா ரால்டே மற்றும் அச்சிந்தா ஷூலி ஆகியோர் இந்தியாவுக்காக மேலும் 2 தங்க பதக்கங்களை வென்றுள்ளனர்.

இருவரின் அற்புதமான வெற்றிக்கும், அவர்களின் எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைந்திடவும் எனது நல்வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story