சுற்றுலா மாளிகை ஊழியரிடம் தகராறு செய்த 2 பேர் கைது


சுற்றுலா மாளிகை ஊழியரிடம் தகராறு செய்த 2 பேர் கைது
x

சுற்றுலா மாளிகை ஊழியரிடம் தகராறு செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அரசு சுற்றுலா மாளிகை உள்ளது. இந்த சுற்றுலா மாளிகையில் ஊழியராக திருவள்ளூர் நேதாஜி சாலையை சேர்ந்த ஸ்டாலின் (வயது 39) என்பவர் உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஸ்டாலின் வழக்கம் போல பணியில் இருந்தார்.

அப்போது ஒரு மோட்டார் சைக்கிள் வந்த 2 பேர் தாங்கள் மின்சார வாரிய துறை அமைச்சரிடம் இருந்து வருவதாக தங்களை அறிமுகம் செய்துகொண்டு தாங்கள் இங்கு தங்குவதற்காக ஈமெயில் மூலமாக ஏற்கனவே பதிவு செய்ததாக தெரிவித்தனர்.

ஆனால் அதற்கான ஆதாரங்களை கேட்டபோது அவர்கள் தகுந்த ஆதாரங்களை தராமல் அவரிடம் வீண் தகராறு செய்தனர். ஆனால் ஸ்டாலின் இது குறித்து தங்களுக்கு எதுவும் அமைச்சர் அலுவலகத்தில் இருந்து தகவல் வரவில்லை என்று தெரிவித்தார்.

அப்போது மது போதையில் இருந்த மேற்கண்ட இருவரும் அவரை தகாத வார்த்தையால் பேசி பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டி உள்ளனர். இது குறித்து ஸ்டாலின் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மது போதையில் அரசு சுற்றுலா மாளிகையில் ரகளையில் ஈடுபட்டது ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 35), நவீன் குமார் (22) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட 2 பேரையும் கைது செய்து இது சம்பந்தமாக விசாரித்து வருகிறார்கள்.


Next Story