கிராவல் மண் அள்ளிய 2 பேர் கைது


கிராவல் மண் அள்ளிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 19 Aug 2022 7:20 PM GMT (Updated: 19 Aug 2022 7:20 PM GMT)

ஆவூர் அருகே கிராவல் மண் அள்ளிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

விராலிமலை தாலுகா, ஆலங்குடி ஊராட்சிக்குட்பட்ட கைகுடிப்பட்டி பகுதியில் அனுமதியின்றி சிலர் கிராவல் மண் அள்ளி செல்வதாக போலீசாருக்கு தகவல் சென்றது. அதன்பேரில் மண்டையூர் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் அப்பகுதியில் கண்காணித்தனர். அப்போது கைகுடிப்பட்டி கருப்பர் கோவில் அருகே பொக்லைன் எந்திரத்தின் மூலம் கிராவல் மண் அள்ளி டிராக்டரில் கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய பொக்லைன் எந்திர டிரைவர் இலுப்பூர் தாலுகா ராப்பூசல் தொட்டியப்பட்டியை சேர்ந்த சூசை மகன் ஜார்ஜ் பெர்னாண்டஸ் (வயது 21), டிராக்டர் டிரைவர் சித்தாம்பூர் பழனிவேல் மகன் தனபால் (28) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் பொக்லைன் எந்திரம், டிராக்டர் ஆகியவை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து மண்டையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ், தனபால் ஆகியோரை கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். மேலும் கிராவல் மண் அள்ளிய இடத்தில் மற்றொரு டிராக்டருடன் தப்பியோடிய சித்தாம்பூரை சேர்ந்த முருகேசன் மகன் ராமையா (28) என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story