வடமதுரை அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது


வடமதுரை அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 Oct 2023 3:00 AM IST (Updated: 23 Oct 2023 3:00 AM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

வடமதுரை அருகே உள்ள கம்பிளியம்பட்டி பகுதியில் வடமதுரை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கம்பிளியம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற குடகிபட்டியைச் சேர்ந்த முருகன் (வயது 52), கூத்தம்பட்டியைச் சேர்ந்த செல்லையா (71) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.24 ஆயிரத்து 500 மற்றும் 70 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

1 More update

Next Story