ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேர் கைது
ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை
வடகாடு அருகேயுள்ள ஆவணம்-கைகாட்டி பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பதாக பல்வேறு புகார்கள் வந்தன. அதன்பேரில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஆவணம்-கைகாட்டி பகுதியில் உள்ள பெட்டிக்கடை அருகே சட்ட விரோதமாக ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட அணவயல் ஆண்டவராயபுரம் பகுதியை சேர்ந்த சேகர் (வயது 50), அணவயல் வதங்கன் தெருவை சேர்ந்த புஷ்பராஜ் (40) ஆகியோரை வடகாடு போலீசார் கைது செய்தனர்.
மேலும், இவர்களிடம் இருந்து ரூ.4,060 மற்றும் 4 செல்போன்கள், 105 ஆன்லைன் லாட்டரி சீட்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story