கடப்பாக்கம் அருகே நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது


கடப்பாக்கம் அருகே நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது
x

கடப்பாக்கம் அருகே நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் அருகே கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் நசீமாபானு (வயது 53). அங்கன்வாடி மையத்தில் சத்துணவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் வீட்டில் இருந்து மொபட்டில் சித்தாமூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு அலுவலக பணிக்காக சென்றார்.

சித்தாமூர் அருகே உள்ள காட்டுதேவத்துார் கிராமம் அருகே நசீமாபானு தனியாக வருவதை அறிந்த 2 மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் அவர் அணிந்து இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து நசீமாபானு சித்தாமூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தலைமையில் தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் செங்குந்தர்பேட்டை பகுதியை சேர்ந்த சரண் (வயது 20), மோச்சேரி கிராமத்தை சேர்ந்த அசோக்குமார் (30) இருவரும் நகைபறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையிலான போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை கைப்பற்றினர். மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றினர்.


Next Story