பொத்தேரி தனியார் பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் மடிக்கணினி திருடிய 2 பேர் கைது


பொத்தேரி தனியார் பல்கலைக்கழகத்தில்  உள்ள விடுதியில் மடிக்கணினி திருடிய 2 பேர் கைது
x

பொத்தேரி தனியார் பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் மடிக்கணினி திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் தங்கி ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் விடுதியில் மாணவர்கள் தங்கி இருந்த அறையில் இருந்து 2 மடிக்கணினி திருட்டு போனது. இது குறித்து மாணவர்கள் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் மடிக்கணினி திருடிய நபர்களை போலீசார் வலை வீசி தேடி வந்தனர். மாணவர்கள் அறையில் இருந்து மடிக்கணினி திருடியதாக திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வாசுதேவன் (வயது 30), மைசூரு பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (25), ஆகியோரை மறைமலைநகர் போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story