வண்டலூரில் டாஸ்மாக் கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் 2 பேர் கைது


வண்டலூரில் டாஸ்மாக் கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் 2 பேர் கைது
x

வண்டலூரில் டாஸ்மாக் கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் இரணியம்மன் நகர் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிள் வந்த 2 வாலிபர்கள் டாஸ்மாக் கடையில் மது வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி செல்லும் போது அதில் ஒரு வாலிபர் திடீரென தனது கையில் வைத்திருந்த நாட்டு வெடி குண்டை டாஸ்மாக் கடை மீது வீசிவிட்டு அங்கிருந்து இருவரும் தப்பிச்சென்று விட்டனர்.

இதில் டாஸ்மாக் கடையின் இரும்பு கேட் சேதம் அடைந்தது. இந்த காட்சிகள் டாஸ்மாக் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகி இருந்தது.

இது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வந்தனர். இந்த நிலையில் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் போலீஸ்காரர்கள் கருப்புசாமி, வேலன், கங்காதரன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் நாட்டு வெடிகுண்டு வீசிய வாலிபரை வலை வீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் டாஸ்மாக் கடையில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் வண்டலூர் பகுதியை சேர்ந்த சொக்கலிங்கம் (வயது 22), பாலமுருகன் (24), ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி இருவரையும் சிறை யில் அடை க்க உத்தரவிட் டார்.


Next Story